/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காலாவதி தேதி குறிப்பிடாத உள்ளூர் தயாரிப்பு குளிர்பானம்காலாவதி தேதி குறிப்பிடாத உள்ளூர் தயாரிப்பு குளிர்பானம்
காலாவதி தேதி குறிப்பிடாத உள்ளூர் தயாரிப்பு குளிர்பானம்
காலாவதி தேதி குறிப்பிடாத உள்ளூர் தயாரிப்பு குளிர்பானம்
காலாவதி தேதி குறிப்பிடாத உள்ளூர் தயாரிப்பு குளிர்பானம்
ADDED : ஜூலை 12, 2011 12:43 AM
ஈரோடு : உள்ளூரில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எதையும் குறிப்பிடாமல் மாதக்கணக்கில் விற்பனை நடக்கிறது.
கோகோ கோலா, பெப்சி போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் வருவதற்கு முன்பிருந்தே, நம் நாட்டில் உள்ளூர் தயாரிப்பாக சோடா, ஜிஞ்சர், பன்னீர் சோடா, ஆரஞ்சு, கோலா போன்ற குளிர்பானங்கள் தயாரித்து விற்கப்பட்டன. இந்த குளிர்பானத்துக்கு மவுசு குறைந்தாலும், இன்றளவும் ஈரோடு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் விற்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே தயாரிக்கும் இதுபோன்ற குளிர்பானங்கள், வாரத்துக்கு இரு முறை நகர கடைகளுக்கு வருகிறது. குறிப்பிட்ட காலம் வரை விற்காத குளிர்பானங்களை திருப்பி வாங்கி செல்வது உண்டு. 200 மில்லி லிட்டர் கொண்ட இந்த குளிர்பானம் ஆறு ரூபாய்க்கு பெற்று, ஏழு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை குளிரூட்டுவதில்லை. குளிர்பானம் நல்ல முறையில் தயாரிக்கப்படவில்லை என்றால், குறிப்பிட்ட காலத்துக்குள் புளித்து, கெட்டு போய் விடுகிறது. அதை குடிக்கும் மக்கள், பல்வேறு உபாதைகளால் அவதிப்படுவர். உள்ளூர் தயாரிப்பு என்பதால், நவீன இயந்திரங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. இருந்தாலும், அரசு விதிகளின் படி தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி, அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிட்டிருக்க வேண்டும். அவை எதுவும் இந்த குளிர்பான பாட்டிலில் இருப்பதில்லை. காலாவதி தேதி தெரியாமல் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அவதிக்கு ஆளாகும் நிலை உள்ளது. இவை மட்டுமின்றி பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் கூட காலாவதி தேதிக்கு பிறகு விற்கப்படும் அவலம் நடக்கிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.