/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/டிரைவர்கள், கண்டக்டர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணாடிரைவர்கள், கண்டக்டர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
டிரைவர்கள், கண்டக்டர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
டிரைவர்கள், கண்டக்டர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
டிரைவர்கள், கண்டக்டர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
ADDED : ஆக 24, 2011 02:34 AM
திருநெல்வேலி : நெல்லையில் புதிதாக நியமிக்கப்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா நடத்தினர்.
3 ஆண்டுகள் வரை நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ள புதிதாக நியமனம் பெற்ற டிரைவர்கள், கண்டக்டர்களை நிரந்தரப்படுத்துவது, 240 நாட்கள் பணிமுடித்த அனைவரையும் நிரந்தரப்படுத்துவது, ஒப்பந்தப்படி சம்பள முரண்பாடுகளை நீக்குவது, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை முழுமையாக வழங்குவது, ரோடு விபத்துக்கு டிரைவரை பொறுப்பாக்கி லைசென்ஸை பறிக்கும் நடவடிக்கையை கைவிடுவது, போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு அரசு விற்பனைவரி விலக்கு அளிப்பது, சேமநல தினக்கூலி டிரைவருக்கு 375 ரூபாய், கண்டக்டருக்கு 374 ரூபாய் அளிப்பது, தேவையான தொழில்நுட்ப ஊழியர்கள், அலுவலக ஊழியர்களை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசுப்போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு சிஐடியு., போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு., மாவட்டத்தலைவர் ராஜாங்கம் துவக்கிவைத்தார். சிஐடியு., மாவட்டச்செயலாளர் மோகன், மின்ஊழியர் மத்திய அமைப்பு திட்டத்தலைவர் வண்ணமுத்து, ஆட்டோத்தொழிலாளர்கள் சங்கத்தலைவர் சுரேஷ்பாபு, சாலைப்போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் மனோகரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் பத்மநாபன், விரைவுப்போக்குவத்து தொழிலாளர் சங்க செயலாளர் அருண், சங்க பொதுச்செயலாளர் பெருமாள், காமராஜ், மணி, வின்சென்ட், சிவதாணுதாஸ், ஜோதி, வன்னியபெருமாள், மரிய ஜான்ரோஸ் உட்பட பலர் பேசினர். தூத்துக்குடி மாவட்ட சிஐடியு., செயலாளர் குமாரவேல் நிறைவுரை ஆற்றினார். போக்குவரத்து தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் எட்டப்பன் நன்றி கூறினார்.