/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்
ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்
ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்
ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்
ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவை., அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும் என ஸ்ரீவை., வடகால் பாசன சங்க போராட்ட குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்தில் தண்ணீர் இன்றி வாடும் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வேண்டியும், விவசாயத்திற்கு தண்ணீர் வழங்காமல் தொழிற்சாலைகளுக்கு அணையிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி செல்வதை கண்டித்தும், வல்லநாடு பகுதியில் அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்கவும், வாய்க்கால் ஆறுகளில் உள்ள அமலை செடிகளை அகற்றிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுப்தை தடுக்க மக்களை திரட்டி விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தனுஷ்கோடி, தனசீலன், பொன்ராஜ், குலையன்கரிசல் கருத்தையா, கூட்டாம்புளி பட்டுமுருகேஷ், மாரமங்கலம் தீப்பாச்சி லட்சுமணன், முத்துராமன், பார்த்திபன், சண்முகசுந்தரம், உமரிக்காடு முருகேசன், ராமலிங்க விஜயன், அகரம் வேல்சுப்பிரமணியன், பழையகாயல் கண்ணன், விவேகானந்தன், மஞ்சள்நீர்காயல் பாலையா, ராமச்சந்திரன், முக்காணி ஆறுமுகம் சின்னதம்பி, இசக்கி, பார்வதிபாண்டியன், கனகராஜ் சீனிவாசன், அசோகன், பூவலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.