/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரூ.32.26 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிரூ.32.26 லட்சத்துக்கு நலத்திட்ட உதவி
ரூ.32.26 லட்சத்துக்கு நலத்திட்ட உதவி
ரூ.32.26 லட்சத்துக்கு நலத்திட்ட உதவி
ரூ.32.26 லட்சத்துக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஆக 01, 2011 10:08 PM
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டத்தில், 32.26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கண்டியன் கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வேலம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில், 5.18 லட்சம் ரூபாய்க்கான விவசாய கடன் வழங்கப்பட்டது.
பழங்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் உழவர் பணி கூட்டுறவு சங்கம் சார்பில், ஆறு மகளிர் குழுக்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் பொருளாதார கடன் வழங்கப்பட்டது. பல்லடம் உழவர் பணி கூட்டுறவு சங்கம் சார்பில் ஒரு மகளிர் குழுவுக்கு 90 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மத்திய கால கடனாக, மேட்டுவலசு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு தலா 42 ஆயிரம் ரூபாய் செம்மறி ஆடு வளர்ப்புக்காக வழங்கப்பட்டது. விவசாய உபகரணம் வழங்கும் திட்டத்தில், பழங்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், இரண்டு பயனாளிகளுக்கு, 4,300 ரூபாய் மதிப்புள்ள விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டது.கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூ, கலெக்டர் மதிவாணன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.