/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரு கோடி ரூபாய் இழப்பு கூட்டுறவு அலுவலர் மீது புகார்ஒரு கோடி ரூபாய் இழப்பு கூட்டுறவு அலுவலர் மீது புகார்
ஒரு கோடி ரூபாய் இழப்பு கூட்டுறவு அலுவலர் மீது புகார்
ஒரு கோடி ரூபாய் இழப்பு கூட்டுறவு அலுவலர் மீது புகார்
ஒரு கோடி ரூபாய் இழப்பு கூட்டுறவு அலுவலர் மீது புகார்
ADDED : ஜூலை 19, 2011 09:31 PM
கோவை : கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மிகக்குறைவான விலைக்கு விற்பனை செய்து, கூட்டுறவு சங்கத்தில் நில மோசடி நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கோத்தாரி நகர் மக்கள் நலச்சங்கம்' என்ற அமைப்பின் சார்பில், ஆறுச்சாமி என்பவர் தலைமையில் சிலர் சேர்ந்து கோவை கலெக்டர் மற்றும் மாநகர காவல்துறை கமிஷனர் ஆகியோரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை சிங்காநல்லூரில் கோத்தாரி பஞ்சாலை பணியாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்குச் சொந்தமான கோத்தாரி நகரில் இரண்டு கடைகளுக்கான நில ஒதுக்கீடு (ஷாப் சைட்) இருந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, அந்த இரண்டு கடை இடங்களையும் அன்றைய தனி அலுவலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, மிகக்குறைந்த விலைக்கு விற்று விட்டார். அந்த இடத்தில், ஒரு சென்ட் ஆறு லட்ச ரூபாய் விலைக்குச் சென்றபோது, சென்ட் 27 ஆயிரம் ரூபாய்க்கும் மிகக்குறைந்த விலைக்கு கூட்டுறவுத்துறை ஊழியர் மற்றும் அவரது மனைவி பெயரில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். மொத்தம் 20.5 சென்ட் இடத்தை, இவ்வளவு குறைந்த விலைக்குக் கொடுத்ததன் மூலமாக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூட்டுறவுத்துறை உயரதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுத்தும் அவர்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய நில மோசடிகளின் மீது நடவடிக்கை எடுத்து வரும் அரசு, இந்த நிலங்களையும் மீட்டு சொசைட்டியிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


