ADDED : ஆக 19, 2011 10:43 PM
திருச்சுழி:திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சியை சேர்ந்தவர்
முத்துராமலிங்கம் (36), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பஞ்சவர்ணம் (24)
திற்க்கும் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குடும்ப
பிரச்சனையில் முத்துராமலிங்கம் அடிக்கடி தன் மனைவியை அடித்து
துன்புறுத்துவார். நேற்று முன்தினம் நடந்த குடும்ப சண்டையில் மாமனார்
பாண்டி தலையிட்டு மருமகனை கண்டித்துள்ளார். இதில் மருமகன் மாமனாரை கொலை
செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். பாண்டி திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் செய்த புகாரின்படி, போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.