Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகரில் நேற்று 304 பேர் மனு தாக்கல்

விருதுநகரில் நேற்று 304 பேர் மனு தாக்கல்

விருதுநகரில் நேற்று 304 பேர் மனு தாக்கல்

விருதுநகரில் நேற்று 304 பேர் மனு தாக்கல்

ADDED : செப் 24, 2011 10:05 PM


Google News

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று மட்டும் 304 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு 8, ஊராட்சி தலைவருக்கு 25, ஊராட்சி வார்டுக்கு 263, பேரூராட்சி வார்டுக்கு 8 பேர் என 304 பேர் நேற்று மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 617 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.



சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றிய 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, எம்.பெருமாள்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார். சிவகாசி நகராட்சியில் 30வது வார்டுக்கு சுயேட்சை வேட்பாளர் சந்திரகுமார், திருத்தங்கல் நகராட்சி 9 வது வார்டிற்கு சுந்தரமகாலிங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தனர். காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. வார்டு உறுப்பினர்களுக்கு ஆவியூர், கம்பிக்குடி, அழகியநல்லூர், கடமங்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். காரியாபட்டி, மல்லாங்கிணர் பேரூராட்சிகளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.



ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி நான்காவது வார்டு கவுன்சிலருக்கு கணேசன், நேற்று மனு தாக்கல் செய்தார். ஒன்றிய கவுன்சிலருக்கு ஆறாவது வார்டுக்கு லட்சுமண பெருமாள், 15வது வார்டுக்கு மாதாசெல்வி, 18வது வார்டுக்கு ஆனந்தன், மனு தாக்கல் செய்தனர். நகராட்சி தலைவருக்கு நேற்றும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.



சாத்தூர்: சாத்தூர் நகராட்சி பதவிக்கும் கவுன்சிலருக்கும் நேற்று வரை யாரும் மனுதாக்கல் செய்ய வில்லை. சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெரிய கொல்லபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு சின்னமாசானம், கஞ்சம்பட்டி ஊராட்சியில் பேச்சியம்மாள், கோசுகுண்டு ஊராட்சியில் முத்துமாரி, ஒ.மேட்டுப்பட்டி ஊராட்சியில் நாகராஜ், பேச்சிமுத்து, ஒத்தையால் ஊராட்சியில் கோபால கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், கருப்பசாமி,ராமசாமி, உப்பத்தூர் ஊராட்சியில் சரவணக்குமார், படந்தால் ஊராட்சியில் நல்லதம்பி, மகேஸ்வரி,சடையம்பட்டி ஊராட்சியில் முருகன்,குமார், சூரங்குடி ஊராட்சியில் அய்யாசாமி, முத்துராமலிங்கம், சுவாமி நாதன் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று வரை 14 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.



ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய 14வது வார்டுக்கு முருகன்(சுயே.,), 6வது வார்டுக்கு ராமமூர்த்தி(சுயே.,), கார்த்திக்(சுயே.,) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சிதவைருக்கு கோட்டைப்பட்டியில் ராமர், பாக்கிய லட்சுமி, படிக்காசுவைத்தான்பட்டியில் லட்சுமி, பிள்ளையார்நத்தத்தில் வெங்கட்டம்மாள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஸ்ரீவி.,நகராட்சி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், மம்சாபுரம் பேரூராட்சிக்கு யாரும் மனு தாக்கல் செய்ய வில்லை.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us