/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அதிகாரிகள்...குழப்பம் : அலைக்கழிக்கப்படும் அரசியல் கட்சியினர்உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அதிகாரிகள்...குழப்பம் : அலைக்கழிக்கப்படும் அரசியல் கட்சியினர்
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அதிகாரிகள்...குழப்பம் : அலைக்கழிக்கப்படும் அரசியல் கட்சியினர்
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அதிகாரிகள்...குழப்பம் : அலைக்கழிக்கப்படும் அரசியல் கட்சியினர்
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அதிகாரிகள்...குழப்பம் : அலைக்கழிக்கப்படும் அரசியல் கட்சியினர்
ADDED : செப் 24, 2011 10:05 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அதிகாரிகள் உச்ச கட்ட குழப்பத்தில் உள்ள நிலையில்,அரசியல் கட்சியினரை அலைக்கழிப்பு செய்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், போதுமான அனுபவம் இல்லாத நிலையில் உள்ளனர். தேர்தல் குறித்த நடவடிக்கைகள் தெரியாத நிலையில் தவிக்கின்றனர். எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களில் உள்ள பதிவுகளை கட்சியினர் முன் அழிக்க, அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்படி கட்சியினர் வந்தபோது, ''உங்களை யார் அழைத்தது,'' என, பெண் தேர்தல் அதிகாரி கேட்டுள்ளார். அதிர்ந்து போன அரசியல் கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். எலக்ட்ரானிக் இது போன்று தேர்தல் குறித்த விபரங்கள், நடவடிக்கைகள் தெரியாத அதிகாரிகளால் அரசியல் கட்சியினர் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனிடையே, வேட்பு மனுவும் துவங்கிய நிலையில், வேட்பு மனு செய்ய வரும் நபர்களுக்கு தேவையான விபரங்களும் வழங்கப்படுவதில்லை.
தேர்தல் நடத்துவதற்கு போதுமான அலுவலர்கள் இல்லாத நிலையில், தேர்தல் பணிகள் செய்யமுடியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். தேர்தல் நடத்தி அனுபம் உள்ள அதிகாரிகளை தேர்தல் பிரிவு அலுவலர்களாக நியமிக்க ,மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என அரசியில் கட்சியினர் கோரி வருகின்றனர்.


