ADDED : ஆக 30, 2011 12:01 AM
பரமக்குடி: தமிழ்நாடு முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட தலைவர் சந்தியாகு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வீரராஜ், மாவட்ட செயலாளர் சுப்பிரயமணியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கதிரேசன், மாவட்ட இணை செயலாளர் மலையரசன் பேசினர். மாநில பிரசார செயலாளர் சுரேஷ் தேர்தலை நடத்தினார். மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன்(திருவரங்கம்), செயலாளர் ராமகிருஷ்ணன்(தேவிபட்டினம்), பொருளாளர் சரத்குமார்(சாயல்குடி), பரமக்குடி கல்வி மாவட்ட தலைவர் தர்மராஜ், செயலாளர் தண்ணாயிரமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.