/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலைமனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 15, 2011 02:06 AM
குமாரபாளையம்: வேலை இல்லாததாலும், குழந்தை இல்லாத ஏக்கத்தாலும் மனமுடைந்த வாலிபர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குமாரபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர். குமாரபாளையம், மணிமேகலை தெருவை சேர்ந்தவர் முரளி (32), அவரது மனைவி ரேவதி (28) திருமணமாகி மூன்று ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. பி.காம் பட்டதாரியான முரளி, வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் சும்மா இருந்ததால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் மனமுடைந்த முரளி, நேற்று மதியம் 2 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமாரபாளையம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


