Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் கையாள கடலூரில் ஒரு நாள் பயிற்சி முகாம்

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் கையாள கடலூரில் ஒரு நாள் பயிற்சி முகாம்

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் கையாள கடலூரில் ஒரு நாள் பயிற்சி முகாம்

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் கையாள கடலூரில் ஒரு நாள் பயிற்சி முகாம்

ADDED : ஆக 29, 2011 10:14 PM


Google News

கடலூர் : கடலூரில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் கையாள்வது குறித்த பயிற்றுனர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக பேரூராட்சிகள், நகராட்சிகளில் எலக்ட்ரானிக் இயந்திம் பயன்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி அதனைக் கையாள்வது குறித்த அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கமிஷனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சினேகலதா, பி.ஆர்.ஓ., முத்தையா முன்னிலை வகித்தனர். கலெக்டர் அமுதவல்லி பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசியதாவது: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்துவது பற்றி பயிற்றுனர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று துவங்கியுள்ளது. இந்த இயந்திரம் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த ஒரு நாள் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். பயிற்சியில் பங்கேற்பவர்கள் ஆர்வமாக அறிந்து கொள்வதோடு ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும், தம்முடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இம் மாவட்டத்தில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தை பயன்படுத்திய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். எனவே தெரியாத விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள் என கலெக்டர் அமுதவல்லி பேசினார். பெல் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் சுப்ரமணியன் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us