Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பார்த்தீனியம் களை செடிகள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பார்த்தீனியம் களை செடிகள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பார்த்தீனியம் களை செடிகள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பார்த்தீனியம் களை செடிகள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

ADDED : செப் 16, 2011 03:46 AM


Google News
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் பார்த்தீனியம் செடிகள் ஒழிப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம், மத்தூர் ஆகிய நீர்வடிப் பகுதியில் உள்ள பார்த்தீனியம் செடிகளை ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின்கீழ் அழித்தல் மற்றும் பொதுமக்களுக்கு, இச்செடிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.சூர்யநகரம் ஊராட்சித் தலைவர் முனிகன்னை ய்யா தலைமை வகித்தார். சங்கச் செயலர் சேமலா வரவேற்றார். முகாமில் வளர்ச்சி அணி உறுப்பினர் கோபிநாத், மாவட்ட நீர்வடிப்பகுதி முகமை களப்பணியாளர் ஆகியோர் கலந்து கொண்டு, பார்த்தீனியம் களைகளை ஒழிப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு விரிவாக எடுத்து கூறியதாவது,''பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் போது, கைகளில் கையுறைகளை மாட்டிக் கொண்டு, மண்ணில் போதிய ஈரம் உள்ள போது வேருடன் பிடுங்கி ஒன்று சேர்த்து அழித்து விடலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில், 200 கிராம் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) கரைத்து பார்த்தீனியம் களைகளில் பூ எடுக்கும் தருணத்தில் செடிகள் மீது தெளித்தால், செடிகள் காய்ந்து விடும்.

இச்செடிகளால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதை ஒழிக்க, தமிழக அரசு கிராமந்தோறும் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.முகாமில் வளர்ச்சி அணி உறுப்பினர் சதிஷ், மத்தூர் சங்கச் செயலர் ஜெயந்தி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, பூண்டி ஒன்றியத்தில், பார்த்தீனியம் செடி ஒழி ப்பு முகாம் ஆட்டரம்பாக்கம் கிராமத்தில், தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.

விரிவாக்க அலுவலர் சமுத்திரம் வரவேற்றார். இதில் திருவள்ளூர் வேளா ண்மை இணை இயக்குனர், நீர்வடிப்பகுதி வேளா ண்மை அலுவலர் மலர், சமூகவியல் அலுவலர் சாமு ண்டிஸ்வரி, பொறியாளர் கிரிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு, பார்த்தீனியம் செடிகளை ஒழிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறி த்து பொதுமக்கள், விவசாயிகளுக்கு எடு த்து கூறினர்.அதே போல் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள வியாசபுரம் கிராமத்தில், தலைவர் லட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடந்தது.

இதில் நீர்வடிப்பகுதி பொறியாளர் கவிதா, சமூகவியல் அலுவலர் சரஸ்வதி, பொறியாளர் ராஜா ஆகியோர் கொ ண்டு, பார்த்தீனியம் களை ஒழிப்பு குறித்து பேசினர். மேலும், விவசாயிகள் முனுசாமி, முத்து, ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us