/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருவொற்றியூர் நகராட்சியில் "கூத்து' கூட்டத்திற்கு வந்த ஒரே கவுன்சிலர்திருவொற்றியூர் நகராட்சியில் "கூத்து' கூட்டத்திற்கு வந்த ஒரே கவுன்சிலர்
திருவொற்றியூர் நகராட்சியில் "கூத்து' கூட்டத்திற்கு வந்த ஒரே கவுன்சிலர்
திருவொற்றியூர் நகராட்சியில் "கூத்து' கூட்டத்திற்கு வந்த ஒரே கவுன்சிலர்
திருவொற்றியூர் நகராட்சியில் "கூத்து' கூட்டத்திற்கு வந்த ஒரே கவுன்சிலர்
ADDED : ஆக 29, 2011 11:01 PM
திருவொற்றியூர் : ஒரே ஒரு கவுன்சிலர் மட்டுமே அவைக்கு வந்ததால், திருவொற்றியூர் நகராட்சிக் கூட்டம் கோரமின்றி தள்ளி வைக்கப்பட்டது.திருவொற்றியூர் நகராட்சிக்கூட்டம், காலை 11 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நகராட்சித் தலைவர் ஜெயராமன் (மார்க்சிஸ்ட்) அவைக்கு வந்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் நாகராஜ் மட்டும் உள்ளே இருந்தார். அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலர்கள் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த நகராட்சித் தலைவர், தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை தள்ளி வைத்தார்.ஜெயராமன் கூறும்போது,'அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலர்களுக்கு மக்கள் நலனில், போதிய அக்கறையின்மையைத்தான் காட்டுகிறது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை' என்றார். தி.மு.க.,வினர் முதலில் போகட்டும் என அ.தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினர் முதலில் போகட்டும் என தி.மு.க.,வினரும் கருதியதால் இந்த சிக்கல் ஏற்பட்டது.அ.தி.மு.க., கவுன்சிலர் தனரமேஷ் கூறும்போது,'நாங்கள் நகராட்சி வளாகத்தில்தான் இருந்தோம். கூட்டம் துவங்கும்போது, உரிய பெல் அடித்து துவக்க வேண்டும். அதுபோன்று பெல் அடிக்கவில்லை. உதவியாளரை விட்டு எங்களை அழைத்திருந்தால் கூட, உள்ளே போயிருப்போம். நகராட்சித் தலைவர் வேண்டுமென்றே இப்படி செய்துள்ளார்' என்றார். திருவொற்றியூர் நகராட்சி, சென்னை மாநகராட்சியுடன் இணைய உள்ள நிலையில் நடக்கும், கடைசி கூட்டம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதில், ஒரே ஒரு கவுன்சிலர் மட்டுமே பங்கேற்றதை அறிந்த அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.