/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு மலைப்பகுதியில் பயிற்சிநேரடி எஸ்.ஐ.,க்களுக்கு மலைப்பகுதியில் பயிற்சி
நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு மலைப்பகுதியில் பயிற்சி
நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு மலைப்பகுதியில் பயிற்சி
நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு மலைப்பகுதியில் பயிற்சி
ADDED : செப் 11, 2011 10:58 PM
பழநி : சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான நேரடி எஸ்.ஐ.,க்களுக்கு, பழநி மலைப்பகுதியில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அதிரடிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பழநி ரேஞ்சர் தர்மராஜ் தலைமையிலான குழுவினர், உயரமான மலைப்பகுதியில் கயிறுகளில் ஏறி, இறங்குதல், கரடு முரடான பகுதிகளில் மலையேற்றம், ஆபத்து நேரங்களில் தப்பிக்கும் வழிகள், எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பாலாறு பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை உள்ளிட்ட பழநி வனப்பகுதியில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதில், 227 எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றுள்ளனர்.