ADDED : அக் 08, 2011 05:45 PM

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் இந்திப் படம் தபாங்கின் ரீமேக் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், படம் அநேகமாக தீபாவளிக்கு ரிலீசாகாது என்றும் கூறப்படுகிறது.
தபாங் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஒஸ்தி தமிழில் ரீமேக்காகி வருகிறது. இதன் ஹீரோ சிம்பு, கிளைமாக்ஸ் காட்சி சல்மான் கான் போல் சிக்ஸ் பேக் உடம்புடன் சண்டை போடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தபாங் படத்திற்காக அரிசி சாப்பாட்டை தவிர்த்து டையட்டில் இருப்பதோடு மட்டுமல்லாமல், தினமும் இரண்டு முறை ஜிம்முக்கு சென்று எக்ஸர்சைஸ் செய்து வருகிறார் சிம்பு. ஆனாலும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு சி்க்ஸ் பேக் உடம்பு தேறவில்லையாம், எனவே கிளைமாக்ஸ் காட்சியில் குறியாக இருக்கும் சிம்பு சிக்ஸ் பேக் உடம்பை தேற்றி விட்டு தான் அடுத்து சூட்டிங் என முடிவு செய்துள்ளாராம். படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீசாக்க வேண்டும் என மொத்த யூனிட்டும் விறுவிறுப்பாக வேலை பார்த்து வந்தது. இந்நிலையில் ஹீரோ சிம்பு போட்ட முட்டுக்கட்டையால் தற்போது படப்பிடிப்பு கிடப்பில் கிடக்கிறதாம்.


