/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாமலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
மலைப்பட்டி பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 01, 2011 02:03 AM
எட்டயபுரம் : எட்டயபுரம் அருகேயுள்ள மலைப்பட்டி பேச்சியம்மன் கோயில் அஷ்டப்பந்தன மகாகும்பாபிஷேக விழா நடந்தது.
எட்டயபுரம் அருகே மலைப்பட்டி பேச்சியம்மன் கோயில் பழம்பெருமைமிக்க சக்திவாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில்நேற்று முன் தினம் காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தேவதாஅனிக்கை எஜமானர் சங்கல்பம், புண்ணியாவாசனம் கும்பபூஜை கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று பூர்ணாகுதி யாத்திராதானம் கும்பம் புறப்படுதல், முதல் விமான அபிஷேகம் மூலஸ்தான அபிஷேகம், பேச்சியம்மன், ஆதிபேச்சியம்மன், வன பேச்சியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கருப்பசாமி ஆகிய தேவதைகளுக்கு நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வீரப்பன், செயலாளர் நடராஜன், பொரு ளாளர் கந்தசாமி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.