/உள்ளூர் செய்திகள்/மதுரை/நகர் போலீசில் 74 இடங்கள் காலி கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?நகர் போலீசில் 74 இடங்கள் காலி கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
நகர் போலீசில் 74 இடங்கள் காலி கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
நகர் போலீசில் 74 இடங்கள் காலி கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
நகர் போலீசில் 74 இடங்கள் காலி கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : ஜூலை 13, 2011 04:11 AM
மதுரை:மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு, குற்றங்களை தடுக்க காலியாக உள்ள 74
பணியிடங்களை நிரப்ப போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும், குற்றங்களை தடுக்கவும்,
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தாலும், அது
போதுமானதாக இல்லை. இதை சமாளிக்க, அவ்வப்போது ஆயுதப்படை, பட்டாலியன்
போலீசார் பணியமர்த்தப்பட்டாலும், அவர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலை
செய்வதில்லை. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆங்காங்கே ஏற்படுகிறது.
குற்றங்கள் நடக்கிறது. நெரிசலில் சிக்கி நகர் விழிபிதுங்குகிறது.நகரில்
நீண்டநாட்களாக 74 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. தேர்தல், சித்திரைத்
திருவிழா போன்ற காரணங்களால் நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது சட்டம்
ஒழுங்கை கருத்திற்கொண்டு, உள்ளூர் ஸ்டேஷனில் பணியாற்ற தயாராக இருக்கும்
ஆயுதப்படை போலீசாரை, காலி பணியிடங்களில் நியமிக்க கமிஷனர் கண்ணப்பன்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.


