/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாழ்க்கைக் கல்விக்கும் வாய்ப்பளிக்குமா சமச்சீர் கல்விவாழ்க்கைக் கல்விக்கும் வாய்ப்பளிக்குமா சமச்சீர் கல்வி
வாழ்க்கைக் கல்விக்கும் வாய்ப்பளிக்குமா சமச்சீர் கல்வி
வாழ்க்கைக் கல்விக்கும் வாய்ப்பளிக்குமா சமச்சீர் கல்வி
வாழ்க்கைக் கல்விக்கும் வாய்ப்பளிக்குமா சமச்சீர் கல்வி
ADDED : ஆக 17, 2011 01:37 AM
கோவை
: நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வியுடன் சேர்த்து, கடந்த சில
மாதங்களாக கற்பிக்கப்பட்ட வாழ்க்கைக் கல்வியும் தொடருமா என்கிற கேள்வி
கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு
கோர்ட்டில் இருந்தபோது, எந்த பாடத் திட்டத்தை பின்பற்றுவது என்கிற சிக்கல்
எழுந்த நிலையில், அரசிடமிருந்து மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி அளிக்கலாம்
என்னும் உத்தரவு வந்தது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் வயது மற்றும்
கற்கும் திறனுக்கேற்ப, வங்கி மற்றும் தபால் நிலைய செயல்பாடுகளில் பங்கேற்க
வைத்ததுடன், திரைப்படங்கள், தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள், பூங்கா,
மிருகக்காட்சி சாலைகள், சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச்
செல்லப்பட்டனர்.சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று கோர்ட்
உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இதுவரை கற்பிக்கப்பட்ட இந்த வாழ்க்கை கல்வி
இனியும் தொடருமா என்கிற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசு
உதவி பெறும் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் கூறியது: கடந்த சில மாதங்களில்
நடந்த செயல்பாடுகள், மாணவர்களின் கற்கும் திறனையும் ஆர்வத்தை
அதிகரித்துள்ளன. இதற்கு முன்பும் கூட, வாழ்க்கை கல்வி, நன்னெறிக் கல்வி,
சூழல் கல்வி ஆகிய பாடங்கள் இருந்தாலும் தற்போதுதான் அவை சிறப்பாக
கற்பிக்கப்பட்டன. வகுப்பறைக்கு உள்ளும் வெளியும் நடந்த பாடங்களும் கிடைத்த
அனுபவங்களும் மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஆசிரியர் கற்றுக் கொடுக்க
மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதுதான் பழைய நடைமுறை. சமச்சீர் கல்வி
குறித்த வழக்கு கோர்ட்டில் இருந்த போது, மாணவர்கள் தங்கள் சுய
விருப்பத்தின் அடிப்படையில் பயிற்சிகள் செய்ய ஊக்குவிக்கப்பட்டனர். இதனால்,
அவர்கள் முன்னெப்போதையும் விட அதிக ஆர்வத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டனர்;
அவர்களின் படைப்பாற்றலும் தன்னம்பிக்கையும் முழுமையாக வெளிப்பட்டது. உலகம்
முழுதும் படைப்பாற்றலை மேம்படுத்தும் கல்வித் திட்டங்களை உயர்த்திப்
பிடிக்கும் இன்றைய காலத்தில், நாம் மட்டும் இன்னும் மனப்பாட சக்தியை
அதிகரிக்கும் பாட திட்டத்தையே பின்பற்றுகிறோம். இது குறித்து பெரும்பான்மை
மக்கள் கவலை கொள்வதாகத் தெரிவில்லை.
இன்றைய கல்வி முறையும்
சமூகமும், மாணவர்களின் சுயத்தை அழிப்பதும் மதிப்பெண்களை வைத்து அவர்களின்
அறிவை எடை போடுவதும் நம் சமூகத்துக்கு நேர்ந்த துரதிருஷ்டமே. கோர்ட்
உத்தரவின்படி, சமச்சீர் கல்வி தொடர்வது மகிழ்ச்சியே அதே சமயம், வாரத்திற்கு
அரை நாளாவது தற்போது உள்ளதைப் போல் குழந்தைகளின் படைப்புத் திறனையும்,
சுயத்தையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகுப்புகள் தொடர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்