தவளை போன்ற வளர்ச்சியை கொண்ட கடல்புல் குழல் மீன்
தவளை போன்ற வளர்ச்சியை கொண்ட கடல்புல் குழல் மீன்
தவளை போன்ற வளர்ச்சியை கொண்ட கடல்புல் குழல் மீன்
ADDED : ஜூலை 24, 2011 02:59 AM

ராமநாதபுரம் : தவளை முட்டையிட்டு, அதன் உருவத்தை அடையாமல் தாவும் நேரத்தில் அடைகிறதோ, அதே போல் வளர்ச்சியை கடல்புல் பேய் குழல் மீன் பெற்றுள்ளது.
பறவைகளுக்கு மரங்கள் போல பெருமளவு கடல் மீனினங்களுக்கு பவளப்பாறைகளே சரணாலயங்கள். குறிப்பாக 'சொலினோஸ்டோமஸ் சயனோப்ட்டிரஸ்' என்னும் மீன், கடற் புற்களிலேயே காணப்படுகிறது. அது கடற் புற்களை போன்ற நிறத்தையும், தோற்றத்தையும் பெற்று அதில் தன்னை மறைத்துக் கொண்டு வாழ்கின்றது. இது பிற பகையினங்களுக்கு உணவாகிவிடாமல், தன்னை காத்துக் கொள்வதற்காக தான். இது, முதுகெலும்பு இல்லாத சிறிய உணவினங்களை உண்டு, 16 செ.மீ., நீளம் வரை வளரும். பெரிதாக வளர்ந்த பின்னரே தனது 'லார்வா' நிலையை மாற்றி, மீனின் முழு தோற்றத்தை பெறுகின்றது. இது மற்ற மீன் இனங்களில் இல்லாத தனி குணமாக கருதப்படுகிறது. எப்போதுமே இம்மீன் தலை கீழாகவே (தரையை நோக்கியவாறே) நீந்தும். தன்னைக் காத்துக் கொள்வதிலும், தனக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்வதிலும், குறியாய் இருக்கும்.