சட்டவிரோதமாக மணல் குவித்து அதிக விலைக்கு விற்பனை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சட்டவிரோதமாக மணல் குவித்து அதிக விலைக்கு விற்பனை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சட்டவிரோதமாக மணல் குவித்து அதிக விலைக்கு விற்பனை : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : 'சட்டவிரோதமாக மணலை குவித்து வைத்து, அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு பதிலளிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லாரிகளில் மணலை நிரப்ப வேண்டிய, 'லோடிங் கான்ட்ராக்டர்கள்' வியாபாரிகளாக மாறினர். இவர்கள் இரண்டாம் விற்பனை என மணலை விற்க துவங்கினர். தற்போது இரண்டாம் விற்பனைக்காக, 612 தனியார் மையங்கள் செயல்படுகின்றன. இரண்டு யூனிட் மணல், 626 ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், தனியார் மையங்களில் இதை, 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். வாகன செலவு, டிரைவர் சம்பளம் என சேர்த்து, வெளிச்சந்தைக்கு வரும் போது, 9,000 ரூபாய் விலை வருகிறது.
தனியார் தான் இரண்டாவது விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதுவும் அதிக விலைக்கு விற்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், தமிழக அரசு ஒரு அரசாணையை பிறப்பித்தது. சட்டவிரோத மணல் குவாரியை தடுப்பதற்காக, மணலை தேக்கி வைத்து லாரிகளில் கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்துவதற்காக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்தி, சட்ட விரோத மணல் கிடங்குகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டவிரோத குவாரி மற்றும் மணலை தேக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும். இரண்டாம் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு தள்ளிவைத்த, 'முதல் பெஞ்ச்' அரசாணையை மீறி சட்டவிரோதமாக மணலை குவித்து அதிக விலைக்கு விற்பவர்கள் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பதிலளிக்கவும் உத்தரவிட்டது.