/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி டவுன் பஞ்., தலைவருக்கு 5 அதிமுக., வினர் மனுத்தாக்கல்உடன்குடி டவுன் பஞ்., தலைவருக்கு 5 அதிமுக., வினர் மனுத்தாக்கல்
உடன்குடி டவுன் பஞ்., தலைவருக்கு 5 அதிமுக., வினர் மனுத்தாக்கல்
உடன்குடி டவுன் பஞ்., தலைவருக்கு 5 அதிமுக., வினர் மனுத்தாக்கல்
உடன்குடி டவுன் பஞ்., தலைவருக்கு 5 அதிமுக., வினர் மனுத்தாக்கல்
ADDED : செப் 18, 2011 11:52 PM
உடன்குடி : உடன்குடி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு அதிமுக., சார்பில் 5 பேரும், கவுன்சிலர்கள் பதவிக்கு 31 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் உடன்குடி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு அதிமுக., சார்பில் உடன்குடி நகர பேரூராட்சி கழக செயலாளர் கோயில்மணி, உடன்குடி டவுன் பஞ்., முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி, முன்னாள் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கடந்த 2001ல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சந்திரா இன்பகரன், உடன்குடி ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ராஜசேகரன் ஆகிய ஐந்து பேரும் அதிமுக., தலைமையில் விருப்ப மனு அளித்துள்ளனர். இதுபோன்று 1வது வார்டு (பெண்) ஜோதிமணியும், 2வது வார்டு (பொது) வள்ளியம்மாள், மணிராஜ், 3வது வார்டு (பொது) ரெங்கன், 4வது வார்டு (பொது) அப்துல் காதர், கலீல், 5வது வார்டு (பெண் எஸ்.சி) பஞ்சவர்ணம், 6வது வார்டு (பொது) செல்வம், பரமசிவம், 7வது வார்டு (பெண்) நீலாவதி, குதாயா, 8வது வார்டு (பொது) ஜபரூல்லா, விஜயா, தங்கத்துரை, 9வது வார்டு (பெண்) ஜன்னத்பாத்திமா, 10வது வார்டு (பொது) இன்பகரன், ஜெயபாண்டி, பால்பாண்டி, 11வது வார்டு (பொது) செல்லையா, 12வது வார்டு (பொது) கோபாலகிருஷ்ணன், ராகவன், 13வது வார்டு (பெண்) ராஜேஸ்வரி, 14வது வார்டு (பொது) வேலாயுதம், சித்திரைசெல்வம், 15வது வார்டு (பொது) ஞானமணி, செல்வகுமார், செல்வராஜ், 16வது வார்டு (பொது) மூக்கன் பெருமாள், மந்திரமூர்த்தி, 17வது வார்டு (பெண்) ஹமீதா, 18வது வார்டு (பொது) இஸ்மாயில் என மொத்தம் 31 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.