ADDED : செப் 09, 2011 01:46 AM
ஈரோடு: ஈரோட்டில் இந்திய பிஸியோதெரபிஸ்ட் சார்பில், உடல் நலம் குறித்த
விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நேற்று, உலக
ஃபிஸியோதெரபி மருத்துவர்கள் தினத்தையொட்டி, உடல்நலம் பேணுதல் குறித்த
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர்
செங்கோட்டையன் பேரணியை துவக்கி வைத்தார். மேட்டூர் ரோடு, எம்.ஜி. ஆர்.,
சிலை, பிரப் ரோடு வழியாக, மாநகராட்சி அலுவலகத்தில் பேரணி முடிந்தது. இந்திய
ஃபிஸியோதெரபிஸ்ட் சங்க ஈரோடு கிளை நிர்வாகி ஹென்றி மோகன்தாஸ், தலைவர்
விஜயராஜ், பொருளாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் ரமேஷ், மோகனசுந்தரம்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


