/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"ஊழலற்ற நிர்வாகம் அமைய பா.ஜ.,வை ஆதரியுங்கள்'"ஊழலற்ற நிர்வாகம் அமைய பா.ஜ.,வை ஆதரியுங்கள்'
"ஊழலற்ற நிர்வாகம் அமைய பா.ஜ.,வை ஆதரியுங்கள்'
"ஊழலற்ற நிர்வாகம் அமைய பா.ஜ.,வை ஆதரியுங்கள்'
"ஊழலற்ற நிர்வாகம் அமைய பா.ஜ.,வை ஆதரியுங்கள்'
ADDED : அக் 06, 2011 09:37 PM
குறிச்சி : ''கோவை மாநகராட்சியில் ஊழலற்ற நிர்வாகம் அமைய பா.ஜ.,வை
ஆதரியுங்கள்'', என கட்சியின் மேயர் வேட்பாளர் செல்வகுமார் பேசினார்.
கோவை
மேயர் பதவிக்கான போட்டியில், பா.ஜ., சார்பில் கட்சியின் மாநில செயலாளர்
செல்வகுமார் களத்தில் உள்ளார். சுந்தராபுரம் பகுதியில் பிரசாரத்தில் அவர்
பேசியதாவது: தமிழகத்திலுள்ள கட்சியினர் அண்ணா பெயரை கூறி, கொள்ளையடித்து
வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் குப்பைக் கூடையாக உள்ளது.
மாநகராட்சிகளில் அதிக வருவாய் உள்ள கோவை மாநகராட்சியில், குடிநீர்
பிரச்னையை தீர்க்க யாரும் முயலவில்லை. ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான்
குடிநீர் வருகிறது. இக்கொள்ளை கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ.,
வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இப்பகுதியில்
நடைபாதையுடன் கூடிய பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்து,
முதியோரும், இளைஞர்களும் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன். மற்ற
மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக மாற்றி, இம்மாநகராட்சியின் நிர்வாகத்தை
ஊழலற்ற, நேர்மையான முறையில் செயல்பட, வாக்காளர்கள் தாமரை சின்னத்தில்
ஓட்டளியுங்கள்.இவ்வாறு, செல்வகுமார் பேசினார்.உடன் வேட்பாளர்கள்
பாலசுப்ரமணியம் (94வது வார்டு), ஆறுமுகம் (96வதுவார்டு), சம்பத்குமார்
(98வது வார்டு) கட்சியின் தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன், கோவை
மாவட்ட கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநகர அமைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.


