Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை

ADDED : அக் 06, 2011 09:37 PM


Google News
பொள்ளாச்சி : 'ஊராட்சிகளில், தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள், வாக்காளர்களுக்கு சரியான ஓட்டு சீட்டை வழங்க வேண்டும்' என, ஓட்டு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் ஓட்டு சாவடி அலுவலர்களு க்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டிலுள்ள கே.கே.ஜி., மண்டபத்தில் நடந்தது.

இதில், தேர்தல் நடத் தும் அலுவலர்கள், கல்யாணசுந்தரம், சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகா ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பில் வலியுறுத்தப்பட்ட கருத்துகள்: மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தனித்த னி நிறங்களில் ஓட்டுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும், ஒன்றிய உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும் ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில், இர ண்டு வார்டுக்கு ஒரு ஓட்டு சாவடி என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, முதல் வார்டுக்கு வெள்ளை நிறமும், இரண்டாவது வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு இளம் நீல நிறமும் ஓட்டு சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளன. ஓட்டு சாவடி அலுவலர்கள் ஓட்டு சீட்டின் நிற ங்களை சரிவர தெரிந்திருக்க வேண்டும். ஓட்டளிக்க வரும் வாக்காளர்களிடம் இது குறித்து தெரிவிக்க வேண்டும். ஒன்றியத்தில், 127 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், 44 ஓட்டு சாவடிகள் ஒரு வார்டு 'பூத்'தாகவும், 83 ஓட்டு சாவடிகள், இரட்டை வார்டு 'பூத்'தாகவும் உள்ளன. ஒரு வார்டு ஓட்டு சாவடிகளில், ஓட்டு பதிவு அலுவலர் தலைமையில் ஆறு பேரும், இரட்டை வார்டு ஓட்டு சாவடிகளில், ஓட்டு பதிவு அலுவலர் தலைமையில் ஏழு பேரும் நியமிக்கப்படுவர். ஓட்டளிக்க வரும் வாக்காளர்களின் பெயர், வார்டு, உரிய ஆவணங்கள் உள்ளதா என்பதை ஆகியவற்றை சரிபார்த்து, அதன்பின்னரே ஓட்டளிக்க வேண்டும்.ஓட்டு சீட்டு வழங்குவதில் குழப்பம் இருந்தால், ஓட்டு பதிவு அலுவலரிடம் விளக்கம் பெறலாம். எந்த வகையிலும், தவறு நேராமல் பார்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, பயிற்சி வகுப்பில் வலியுறுத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us