/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/இளைஞர் சுயவேலை வாய்ப்பு பயிற்சிக்கு சான்றிதழ் : தஞ்சை மாவட்ட கலெக்டர் வழங்கல்இளைஞர் சுயவேலை வாய்ப்பு பயிற்சிக்கு சான்றிதழ் : தஞ்சை மாவட்ட கலெக்டர் வழங்கல்
இளைஞர் சுயவேலை வாய்ப்பு பயிற்சிக்கு சான்றிதழ் : தஞ்சை மாவட்ட கலெக்டர் வழங்கல்
இளைஞர் சுயவேலை வாய்ப்பு பயிற்சிக்கு சான்றிதழ் : தஞ்சை மாவட்ட கலெக்டர் வழங்கல்
இளைஞர் சுயவேலை வாய்ப்பு பயிற்சிக்கு சான்றிதழ் : தஞ்சை மாவட்ட கலெக்டர் வழங்கல்
ADDED : செப் 01, 2011 01:52 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நபார்டு மற்றும் ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதன்மை மேலாளர் ராஜா வரவேற்றார்.
ஐ.ஓ.,பி., முதன்மை மண்டல மேலாளர் கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தார்.
சுயவேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: ஐ.ஓ.பி., வங்கி முன்னோடி வங்கியாக பெயருக்கேற்ப செயல்படுகிறது. பெரிய நிறுவனங்கள் லாபத்தில் ஒரு பகுதியை சமூக சேவைக்காக செலவு செய்வார்கள். அதுபோல் ஐ.ஓ.பி., வங்கியும் இந்த வேலை வாய்ப்பு மையமும் இணைந்து இளைஞர்களுக்கு சேவை மனப்பாண்மையுடன் சுய தொழிலுக்கான பயிற்சியும் அதற்கான சான்றிதழ்களும், வங்கி கடன் உதவிகளையும் அளித்து வருவது பாராட்டுக்குரியது.
இந்த பயிற்சி மையமானது மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்குவதும் பாராட்டுக்குரியது. இளைஞர்கள் தொழில் சார்ந்த படிப்பில் ஈடுபடும் இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்தில் 30 நாட்கள் பயிற்சி பெற்று செல்லும் போது தன்னம்பிக்கையோடு செல்கிறார்கள். வாழ்க்கையில் சாதனை எளிதில் கிடைத்து விடுவதில்லை. போராடித்தான் சாதனையைப் பெற முடியும். சுய தொழிலுக்கு அடிப்படை தேவை ஒழுக்கம், நேரம் தவறாமை, நம்பிக்கை, நாணயம், சேவை மனப்பான்மை. இவற்றோடு வாடிக்கையாளர்களை கவரும் திறமை. வாடிக்கையாளர் தேடி வரும் நிலையை உருவாக்காமல் குறித்த நேரத்தில் அவர்களுக்கு சேவை செய்வது.
இவையே சுயதொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அடிப்படை தேவையாகும். காலமாற்றத்துக்கேற்ப சந்தை நிலவரத்துக்கேற்ப மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பொருட்களை உற்பத்தி செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்த பத்தாண்டில் உங்களுடைய இலக்கு என்ன என்பதை நிர்ணயித்து கொண்டு உங்களின் உழைப்பை முறையாக நல்கி பணியாற்றினால் வெற்றி உங்களுக்கே என பயிற்சி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் பேசினார்.
நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் ரவிக்குமார், முன்னோடி வங்கிகளின் மேலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் வெற்றிச்செல்வன் நன்றி தெரிவித்தார்.