மலை மாவட்டத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: நடவடிக்கையை முடுக்கி விட்டால் நிம்மதி
மலை மாவட்டத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: நடவடிக்கையை முடுக்கி விட்டால் நிம்மதி
மலை மாவட்டத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: நடவடிக்கையை முடுக்கி விட்டால் நிம்மதி
ஊட்டி: நீலமலையின் தலைநகரமான ஊட்டியில், குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது, உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகியவை, குளிர் வாசஸ்தலங்களாக கருதப்படுகின்றன.
விதிமுறை காற்றில் விடப்பட்டதால், ஊட்டியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஓய்வு விடுதிகள், சீசன் காலங்களில் சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படுகின்றன. இத்தகைய காட்டேஜ்களில், சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்த உண்மையான விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக உள்ள மலை மாவட்டத்தின் தலைநகரம் மெல்ல, மெல்ல குற்றச் செயல்களை அரங்கேற்றும், 'கொலை நகரமாக' மாறி வருகிறது. இதற்கு, ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியில், அனுமதியில்லாத காட்டேஜில், சமீபத்தில் நடந்த, 'இரட்டை கொலை' சம்பவம் முக்கிய உதாரணம். மறைமுக காட்டேஜ்களுக்கு, 'கடிவாளம்' போட, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பல்வேறு குற்றங்கள் அரங்கேறும் பகுதியாக, ஊட்டி மாறுவது நிச்சயம்.