மா அடர்நடவு செய்தால் 75 சதவீத மானியம்
மா அடர்நடவு செய்தால் 75 சதவீத மானியம்
மா அடர்நடவு செய்தால் 75 சதவீத மானியம்
ADDED : ஆக 01, 2011 02:08 AM
கொட்டாம்பட்டி:''கொட்டாம்பட்டி வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்
கீழ் மா அடர் நடவு செய்யும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்
படும்,'' என, தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: இத்திட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 160 மா ஒட்டுக்
கன்றுகள், உரங்கள் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் 75 சதவீத
மானியத்தில் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசன வசதியும் செய்து தரப்படும்.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அல்லது
தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என கூறியுள்ளார்.