ADDED : செப் 08, 2011 11:19 PM
ஊட்டி : அகில இந்திய மாற்று திறனாளிகள் மக்கள் நல வாழ்வு சங்க கூட்டம்
ஊட்டியில் நடந்தது.
சங்க தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்,'மாற்று திறனாளிகள் வசிக்கும் தாவனெ இந்திராநகர் பகுதியில்
இருள் சூழ்ந்துள்ளதால் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்; ஊட்டி ஹோபார்ட்
பள்ளி அருகில் டவுன் பஸ் ஸ்டாண்ட்டில் காந்தல், தலைகுந்தா, கல்லட்டி,
கோட்டட்டி, கேர்ன்ஹில் பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்,
பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் காத்து நிற்பதால் இங்கு நிழற்குடை அமைக்க
வேண்டும்; சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் ஊட்டி படகு இல்லம்
பகுதியில் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.