/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி திறப்பு விழாஉடன்குடியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி திறப்பு விழா
உடன்குடியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி திறப்பு விழா
உடன்குடியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி திறப்பு விழா
உடன்குடியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி திறப்பு விழா
ADDED : செப் 22, 2011 12:03 AM
உடன்குடி : உடன்குடியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை
நீர்தேக்கத்தொட்டி துவக்க விழா நடந்தது.
உடன்குடி டவுன் பஞ்.,8வது வார்டில்
எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5
லட்சம் செலவில் புதுமனை பள்ளிவாசல் அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு
கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அதன் துவக்க விழா புதுமனை
தெருவில் நடந்தது. உடன்குடி டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி செல்வராஜ் தலைமை
வகித்தார். துணை தலைவர் ஜான்பாஸ்கர் முன்னிலை வகித்தார். 8வது வார்டு
கவுன்சிலர் முகைதீன் அப்துல்காதர் வரவேற்றார். புதிய நீர்தேக்க தொட்டியை
உடன்குடி டவுன் பஞ்.,தலைவர் சாகுல்ஹமீது துவக்கி வைத்தார். இதில்
கவுன்சிலர் அன்வர்சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.