Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விளையாட்டு மைதானத்தில் வசதிகள் இல்லாமல் வீரர்கள் பரிதவிப்பு

விளையாட்டு மைதானத்தில் வசதிகள் இல்லாமல் வீரர்கள் பரிதவிப்பு

விளையாட்டு மைதானத்தில் வசதிகள் இல்லாமல் வீரர்கள் பரிதவிப்பு

விளையாட்டு மைதானத்தில் வசதிகள் இல்லாமல் வீரர்கள் பரிதவிப்பு

ADDED : செப் 20, 2011 09:25 PM


Google News
விருதுநகர்:விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வீரர்கள் பரிதவிக்கின்றனர்.விருதுநகரில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வீரர்களுக்கான குத்துச்சண்டை மைதானம் பயன்படுத்த முடியாது சேதமடைந்துள்ளது. சிமென்ட் தளத்தில் போடப்பட்டுள்ள கூடைப்பந்து மைதானத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் விளையாடும் போது தவறி விழும் நிலை உள்ளது. மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி போட்டிகள் நடத்த முடியாத நிலை உள்ளது. மாவட்டத்தில் தனியார் இடங்களில்தான் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம் இல்லாததால் நீச்சல் வீரர்கள் பயிற்சி பெற முடியாது தவிக்கின்றனர். ஓடுதளம், கால்பந்து, ஹாக்கி மைதானங்களை முறையாக பராமரிக்காததால், மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி குளங்களாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் முட்புதர்கள் மண்டி விடுகிறது.இங்குள்ள பார்வையாளர்கள் மாடமும் சேதமடைந்துள்ளது. மேற்கூரைகளும் சேதமடைந்து, விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்கள் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலை ரோடுகளுக்காக இடம் கையகப்படுத்தியதில் அகற்றப்பட்ட சிறுவர்கள் விளையாட்டு பூங்காவிற்கு, நெடுஞ்சாலைத்துறையினரால் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு பல மாதங்களாகியும், பூங்கா அமைவதில் தாமதம் ஏற்படுகிறது.

விளையாட்டு வீரர்களும் பயிற்சி பெற முடியாத நிலையில் உள்ளனர். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், போதுமான விளையாட்டு பயிற்சியாளர்கள் இல்லாத நிலையும் உள்ளன. இதனால் வீரர்கள் சாதனை படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, விளையாட்டு மைதானத்தில் அனைத்து வசததிகளையும் ஏற்படுத்த முன் வர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us