/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலய உறுப்பினர்கள் தேர்வுசி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலய உறுப்பினர்கள் தேர்வு
சி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலய உறுப்பினர்கள் தேர்வு
சி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலய உறுப்பினர்கள் தேர்வு
சி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலய உறுப்பினர்கள் தேர்வு
கோவை : திருச்சி ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ.,கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர்தலில் ஆலய மற்றும் திருமண்டல உறுப்பினர்கள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தாண்டு தேர்தல் நடத்தும் சூழ்நிலை நிலவியது. ஐந்தாயிரம் பேருக்கு மேல் சபை மக்கள் இருந்தாலும், இந்தாண்டு ஓட்டுரிமை பெற்றவர்கள் 2,505 பேர் மட்டுமே. இதில் ஆலய கமிட்டிக்கு ஒன்பது பேரும், திருமண்டல உறுப்பினர்களாக ஆறு பேரும் தேர்வு பெற வேண்டும். ஆலய கமிட்டிக்கென 26 பேரும், திருமண்டல உறுப்பினர் பதவிக்கு 17 பேரும் போட்டியிட்டனர். 2,505 பேர் ஓட்டு போடுவதற்கு தகுதி பெற்றவர்கள். ஆனால் 1,394 பேர் மட்டுமே ஓட்டு போட் டனர். இதில் 52 செல்லாத ஓட்டுகள். தற்காலிக பிஷப் பொறுப்பிலிருக்கும் கருணாகரன், தலைமையில் தேர்தல் அமைதியாக நடந்தது. சபை முதன்மை போதகர் எபனேசர் மணி, உதவி போத கர் அன்பானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.