/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பேரிகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்புபேரிகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு
பேரிகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு
பேரிகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு
பேரிகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு
ADDED : செப் 05, 2011 11:54 PM
ஓசூர்: ஓசூர் அருகே பேரிகையில், 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ்ஸ்டாண்டை, எம்.எல்.ஏ., கோபிநாத் திறந்து வைத்தார்.
ஓசூர் அருகே உள்ள பேரிகை நகரம் கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தினசரி ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் வந்து செல்கிறது. கனரக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் பேரிகை வழியாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்கின்றன. ஆனால், பேரிகையில் சரியான பஸ்ஸ்டாண்ட் இல்லாமல் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பேரிகையில் ஓசூர், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில சாலைகள் சந்திக்கும் குறுகிய சந்தை பகுதி பஸ்நிறுத்தம் இடமாக செயல்பட்டு வந்தது. பஸ்ஸ்டாண்ட் அமைக்க கடந்த, 20 ஆண்டாக முயற்சி செய்தும் பஸ்ஸ்டாண்ட் கட்டப்படவில்லை. இதனால், மழை காலத்திலும், வெயில் காலத்திலும் பஸ்சிற்காக காத்து நிற்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்த ஓசூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., முயற்சியால், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 18 லட்சமும், நமக்கு நாமே திட்டத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாயும், பஞ்சாயத்து நிதியாக, 12 லட்சமும் சேர்த்து மெ,õத்தம் 40 லட்சம் ரூபாயில் பேரிகையில் புதுபஸ்ஸ்õடண்ட் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட இந்த புதுபஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டது. நேற்று திறப்பு விழா நடந்தது. பேரிகை பஞ்சாயத்து தலைவர் ரமணி சரவணன் தலைமை வகித்தார். கே.என்.தொட்டி பஞ்சாயத்து ராமச்சந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நஞ்சப்பா, ஊர் முக்கிய பிரமுகர்கள் காதர் பாய், அமீர் கான், சவுகத், இலியாஸ், முனிர் முன்னிலை வகித்தனர். ஓசூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோபிநாத் புதுபஸ்ஸ்டாண்ட்டை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''பேரிகையில் பொதுமக்களுடைய நீண்ட கால கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஸ்ஸ்டாண்ட் இல்லாமல் இப்பகுதியின் முன்னேற்றம் தடைப்பட்டது. தற்போது பஸ்ஸ்டாண்ட் கட்டுப்பட்டுள்ளதால், வியாபாரம் மட்டுமின்றி தொழில் வளத்திலும் பேரிகை வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைக்காக எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம், '' என்றார். ஊர் பொதுமக்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.