Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முஸ்லிம் மக்கள் கழகத்தினர் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

முஸ்லிம் மக்கள் கழகத்தினர் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

முஸ்லிம் மக்கள் கழகத்தினர் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

முஸ்லிம் மக்கள் கழகத்தினர் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

ADDED : அக் 04, 2011 11:07 PM


Google News

திண்டிவனம் : உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிக்க முஸ்லிம் மக்கள் கழகம் முடிவு செய்துள்ளது.கடந்த தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் கழகம் தி.மு.க., அணியை ஆதரித்து வந்தது.

இந்நிலையில் இந்த அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் ஜைனுதீன் தலைமையில் திண்டிவனத்தில் நடந்தது.இக்கூட்டத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.முக.,வை ஆதரிப்பது. மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலைவர் ஜைனுதீன், தலைமை நிலைய செயலாளர் அபிபுர்ரஹ்மான், மகளிரணி அமைப்பாளர் சிராஜ் பேகம் மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க.., மாவட்ட செயலாளரான அமைச்சர் சண்முகத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us