/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கர்ப்பப்பை வாய் நோய்கள்கண்டறியும் சிறப்பு முகாம்கர்ப்பப்பை வாய் நோய்கள்கண்டறியும் சிறப்பு முகாம்
கர்ப்பப்பை வாய் நோய்கள்கண்டறியும் சிறப்பு முகாம்
கர்ப்பப்பை வாய் நோய்கள்கண்டறியும் சிறப்பு முகாம்
கர்ப்பப்பை வாய் நோய்கள்கண்டறியும் சிறப்பு முகாம்
ADDED : செப் 11, 2011 12:43 AM
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு
சுகாதாரத்துறை, தஞ்சை மாவட்டம் இந்தயின் ஓவர்சீஸ் வங்கி, கோட்டை ரோட்டரி
சங்கம் ஆகியவை இணைந்து கர்ப்பப்பை வாய் நோய்கள் கண்டறியும் சிறப்பு முகாம்
நேற்று காலை நடந்தது.முகாமில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார
கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்துகொண்டனர்.
பரிசோதனைக்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாம்பன்,
தஞ்சாவூர் சுகாதார ஆய்வாளர் சிங்காரவேலன், அரசு மருத்து பணியாளர்கள்,
செவிலியர்கள் (நர்சுகள்) குளோபல் நர்சிங் கல்லூரி மாணவியர்கள் முன்னின்று
செய்தனர்.
முகாமில், கோட்ட ரோட்டரி சங்க தலைவர் ஜோசப்ராஜ் தலைமை வகித்தார். இந்திய
ஓவர்சீஸ் வங்கி பட்டுக்கோட்டை கிளை மேலாளர் ரவி வரவேற்றார். இந்தியன்
ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் கிருஷ்ண பிரசாத், கோட்டை ரோட்டரி
சங்க தலைவர் ஜோசப்ராஜ், சந்திரா, மீனாநியூட்டன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி
துவக்கிவைத்தனர்.'இதுபோன்ற முகாம்களில் எந்த சுயநலமும் இல்லாமல்
பொதுமக்களின் நலன் கருதியே தொண்டு நிறுவனங்களுடன் இணைந்த தமிழக சுகாதார
துறை செயல்படுவதாக' தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர் சிங்காரவேலன்
கூறினார்.மகப்பேறு மருத்துவர் மீனா, நியூட்டன் கர்ப்பப்பை வாய் நோய்களின்
விளைவுகள் பற்றி முகாமில் கலந்துகொண்ட தாய்மார்களிடம் விளக்கி,
பரிசோதனையின் அவரச அவசியம் பற்றி தெளிவுப்படுத்தினார்.