/உள்ளூர் செய்திகள்/கரூர்/பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கைபொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பொதுமாறுதலை கைவிட வேண்டும் அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
கரூர்: ''தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக என கூறி செய்யப்படும் பொதுமாறுதலை அரசு கை விட வேண்டும்,'' என மாநில முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக அமைப்பு செயலாளர் வள்ளிவேல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டம்தான் நடைமுறையில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு அரசு ஊழியராக, ஆசிரியராக பணிபுரிந்தவர்களுக்கு பென்ஷன் திட்டம்தான் பாதுகாப்பாக உள்ளது. இதை பல போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியுள்ளோம். கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய விகிதம் களையப்படும். பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என அ.தி. மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, ஊதிய விகிதம் களைதல் மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.