Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் பரிசளிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் பரிசளிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் பரிசளிப்பு

பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் பரிசளிப்பு

ADDED : ஜூலை 27, 2011 12:19 AM


Google News

செஞ்சி : செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.

சங்கத்தின் புதிய தலைவராக சந்திரசேகரன், செயலராக சரவணன், பொருளாளராக முகமது சித்திக், உடனடி தலைவராக அய்யப்பன், துணைத் தலைவராக ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் குணா அய்யப்பன் மற்றும் இயக்குனர்கள், திட்ட தலைவர்கள் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் எம். எல்.ஏ., கணேஷ்குமார், கவிஞர் தாமரைக்கண்ணன், மண்டல உதவி ஆளுநர் ரமேஷ் சந்த் வாழ்த்துரை வழங்கினர். போலியோ ஒழிப்பிற்காக உண்டியல் வசூல் மூலம் 7,500 ரூபாய் சேகரிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இடம் பிடித்த செஞ்சி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us