/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கிராமத்திற்குள் நுழைந்த புள்ளிமான்காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைப்புகிராமத்திற்குள் நுழைந்த புள்ளிமான்காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
கிராமத்திற்குள் நுழைந்த புள்ளிமான்காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
கிராமத்திற்குள் நுழைந்த புள்ளிமான்காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
கிராமத்திற்குள் நுழைந்த புள்ளிமான்காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 16, 2011 03:46 AM
பொன்னேரி:காட்டிலிருந்து வழி தவறி, கிராமத்திற்குள் நுழைந்த புள்ளிமானை,
கிராம மக்கள் காப்பாற்றி போலீசார் மூலம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மீஞ்சூர் அடுத்துள்ளது புதுப்பேடு கிராமம். நேற்று காலை அங்குள்ள திரவுபதி
அம்மன் கோவில் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக்
கொண்டிருந்தனர். அப்போது நாய்கள் ஒரு புள்ளிமானை துரத்தியபடி வந்தன.இதை
கவனித்த சிறுவர்கள், நாய்களை விரட்டியடித்து புள்ளிமானை காப்பாற்றி, ஊர்
பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். நாய்கள் துரத்தியதாலும், மனிதர்களை கண்ட
பயத்தினாலும் புள்ளிமான் மயக்கமாகி விழுந்தது.இது குறித்து அப்பகுதி
மக்கள், மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்ற போலீசார், பொதுமக்களின் பாதுகாப்பிலிருந்த புள்ளிமானை
மீட்டு, மீஞ்சூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை
அளித்தனர்.பழவேற்காடு கடற்கரையோரத்தில் உள்ள காட்டுப்பள்ளி, காளஞ்சி பகுதி
காடுகளிலிருந்து அவ்வப்போது, இதுபோன்ற புள்ளிமான்கள் தண்ணீர் மற்றும் இரையை
தேடி, கிராமங்களுக்கு வழி தவறி நுழைந்து விடுவதாக பொதுமக்கள் கூறினர்.
காட்டிலிருந்து வழி தவறி, கிராமத்திற்குள் நுழைந்த புள்ளிமான்,
கும்மிடிப்பூண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.