/உள்ளூர் செய்திகள்/சேலம்/தேவதாஸ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பங்கேற்புதேவதாஸ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பங்கேற்பு
தேவதாஸ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பங்கேற்பு
தேவதாஸ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பங்கேற்பு
தேவதாஸ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பங்கேற்பு
ADDED : ஜூலை 14, 2011 01:35 AM
சேலம்: முன்னாள் எம்.பி., தேவதாஸ் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் வாசன், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான தேவதாஸ் மகன் பிரபுராம், தீபிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று அழகாபுரம் ரத்தினவேல் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது. நேற்று மாலை 6 மணியில் இருந்து உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் வருகை புரிந்தனர். மாலை 6.45 மணிக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் வந்தார். அவரை, முன்னாள் எம்.பி., தேவதாஸ், இளவரசி ஆகியோர் வரவேற்றனர். மணமக்களுக்கு வாசன் வாழ்த்து கூறினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., சித்தன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ., விஜயலட்சுமி, மாநகராட்சி மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் மணமக்களுக்கு வாழ்த்து கூறினர்.


