/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நவீன மருத்துவம்: அன்சாரி தகவல்மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நவீன மருத்துவம்: அன்சாரி தகவல்
மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நவீன மருத்துவம்: அன்சாரி தகவல்
மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நவீன மருத்துவம்: அன்சாரி தகவல்
மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு நவீன மருத்துவம்: அன்சாரி தகவல்
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
நெய்வேலி : மனநலம் குன்றிய குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அவர்களது நிலையை மாற்ற நவீன மருத்துவ முறை பின்பற்றப்படுவதாக சேர்மன் அன்சாரி பேசினார்.
நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 2ல் செயல்பட்டு வரும் சிநேகா சேவை அமைப்பின் வாயிலாக, மனநலம் குன்றிய குழந்தைகளின் வளர்ச்சிக்கு என்.எல்.சி., நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிகச் சிறந்த மனநல நிபுணர்கள் மூலமாக கைத்தொழில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று முன்தினம் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சேர்மன் அன்சாரியின் துணைவியார் கிஸ்வர் சல்தானா தலைமை தாங்கினார். இயக்குனர்கள் சரேந்தர்மோகன், சரத்குமார் ஆச்சார்யா, மகிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். காவேரி சிவஞானம், டாக்டர் உஷா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட சேர்மன் அன்சாரி, 50 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது: பல நவீன மருத்துவ முறையை பின்பற்றி, மாற்றுத் திறனாளிகள் செயல்துறை மருத்துவரை பணியமர்த்தவும்,இத்துறையின் நிபுணர்களை அடிக்கடி நெய்வேலிக்கு அழைத்து பெற்றோர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இக்குழந்தைகளிடம் பல திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை கண்டறிந்து அவர்கள் நிலையை மாற்றவும், மேலும் வளப்படுத்த அறிவியல் பூர்வமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சேர்மன் அன்சாரி பேசினார்.