/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரயில்வேயில் பணிபுரிய மாஜி வீரர்கள் அழைப்புரயில்வேயில் பணிபுரிய மாஜி வீரர்கள் அழைப்பு
ரயில்வேயில் பணிபுரிய மாஜி வீரர்கள் அழைப்பு
ரயில்வேயில் பணிபுரிய மாஜி வீரர்கள் அழைப்பு
ரயில்வேயில் பணிபுரிய மாஜி வீரர்கள் அழைப்பு
ADDED : செப் 05, 2011 11:54 PM
கிருஷ்ணகிரி: இந்திய ரயில்வேயில், உதவி லோகோ பைலட் பணியிடத்திற்கான ஆட்கள் தேர்வில், முன்னாள் படைவீரர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், விருப்பமுள்ள படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் முத்துராம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய ரயில்வேயில், உதவி லோகோ பைலட் பதவிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்த பணியில் முன்னாள் படைவீரர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விண்ணப்பிப்போர் எஸ்.எஸ்.எல்.ஸி., தேறிய பின், அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், ரேடியோ டிவி மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், டர்னர் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் படித்து ஐ.டி.ஐ.,சான்று பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகாரம் பெற்ற பல்தொழில் நுட்பக் கல்லூரியில் படித்து டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 2012 ஜனவரி 1ம் தேதி, 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களுக்கு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு செய்யப்படும். முன்னாள் படைவீரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் ஃபோட்டோ, எஸ்.எஸ்.எல்.ஸி., சான்றிதழ், கல்வி தகுதி, ஜாதி சான்றிதழ், கண்பார்வை சான்றிதழ், முன்னாள் படைவீரர்களின் படைவிலகல் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து, வரும் 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பபடிவம், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி போன்ற இதர விவரங்களை, கிருஷ்ணகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அனுகி தெரிந்து கொள்ளலாம்.