சரக்குகள் தேக்கம்: ரூ.5000 கோடி இழப்பு
சரக்குகள் தேக்கம்: ரூ.5000 கோடி இழப்பு
சரக்குகள் தேக்கம்: ரூ.5000 கோடி இழப்பு
மதுரை: லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தால், மதுரையில் ஜவுளி உட்பட தீபாவளி சரக்குகள் தேக்கமடைந்துள்ளதால், வர்த்தகர்களுக்கு ரூ.5000 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
டீசல், சுங்கவரி உயர்வால் முதல் தென்மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், டிரைவர்கள், கிளீனர்கள், லோடுமேன்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓய்வெடுக்க துவங்கியுள்ளனர்.
வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு இரு மாதங்களுக்கு முன்பே ஜவுளிகள் போன்றவை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்தாண்டு அக்டோபரில் தீபாவளி பண்டிகை வருகிறது. இதற்காக மும்பை, சூரத் போன்ற வடமாநில நகரங்களில் இருந்து சேலை போன்றவற்றை வர்த்தகர்கள் லாரிகளில் கொண்டு வரதுவங்கினர். அதேபோல், மதுரையில் இருந்து ரெடிமேட் சட்டைகள் போன்றவற்றை அனுப்பி வந்தனர். இந்நிலையில், லாரிகளின் வேலைநிறுத்தத்தால், தீபாவளிக்குரிய சரக்குகளை அனுப்ப முடியவில்லை. இதனால் ரூ.5000 கோடி இழப்பு ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சாத்தையா கூறினார்.
அவர் கூறியதாவது :
ரம்ஜான், ஓணம் பண்டிகைகளுக்காக ஜவுளி வரத்து அதிகரித்த நிலையில், தற்போது வேலைநிறுத்தம் காரணமாக வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட முடியாமல், சரக்குகள் குடோன்களில் முடங்கி உள்ளன. மதுரையில் சரக்கு லாரிகள், குட்ஷெட் லாரிகள், மணல் லாரிகள் என மொத்தம் 4000 லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதுவரை அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், திட்டமிட்டப்படி போராட்டம் தொடருகிறது, என்றார்.