ADDED : அக் 05, 2011 10:11 PM
கோவை : கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில் 13 வார்டுகளில் சுயேச்சைகள் யாரும் போட்டி
யிடாததால், அரசியல் கட்சிகள் நேரடியாக மோது
கின்றன. உள்ளாட்சி தேர்தலில் அரசியல்
கட்சிகளின் கூட்டணிகள் உடைந்து, ஒவ்
வொரு கட்சியும் தனித்தனியாக களத்தில்
குதித்திருப்பதால், தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.
குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகள்,
துடியலூர், வெள்ளக்கிணர், சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி,
வீரகேரளம், வடவள்ளி ஆகிய ஏழு பேரூராட்சிகள், விளாங்குறிச்சி ஊராட்சி ஆகியவை
இணைக்கப்பட்டதால், முன்பு 72 வார்டுகளுடன் இருந்த கோவை மாநகராட்சி,
தற்போது 100 வார்டுகளை கொண்டதாக மாநகராட்சி மாறியுள்ளது.
கோவை மாநகராட்சி இறுதி பட்டியல் படி, மேயர் பதவிக்கு 27 பேர்; நூறு
வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 886 பேர் களத்தில் உள்ளனர். இதில், 12,
15, 16, 22, 23, 27, 36, 42, 47, 53, 56, 66, 90 ஆகிய 13 வார்டுகளில்
சுயேச்சைகள் யாரும் போட்டியிடவில்லை. இதனால், அ.தி.மு.க., தி.மு.க.,
தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ., மா.கம்யூ, இ.கம்யூ, பா.ம.க., பகுஜன் சமாஜ்
உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் நேரடியாக மோதும் நிலை
உருவாகியுள்ளது.


