Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மருத்துவமனை கட்டிட பணி நவம்பரில் முடிக்க நடவடிக்கை

மருத்துவமனை கட்டிட பணி நவம்பரில் முடிக்க நடவடிக்கை

மருத்துவமனை கட்டிட பணி நவம்பரில் முடிக்க நடவடிக்கை

மருத்துவமனை கட்டிட பணி நவம்பரில் முடிக்க நடவடிக்கை

ADDED : ஆக 26, 2011 12:59 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை, வரும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட பின், பல்வேறு நோய் சிகிச்சைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவக் கழக வழிகாட்டுதலின் படி, நவீன அறுவை சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான கருவிகள் மருத்துவமனைக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. தரம் உயர்த்தப்பட்டுள்ள இந்த மருத்துவமனை வளாகத்தில், சிறப்பு பிரிவுகள் அமைக்கும் வகையில், 4,367 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி, 2010 ஆகஸ்டில் துவக்கப்பட்டது. 500 படுக்கை வசதிகள் கொண்ட இக் கட்டிடத்தில், 16 ஆபரேஷன் தியேட்டர்களுடன் நியூரோ மற்றும் ஆர்த்தோ உள்பட பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவுகளும் அமையவுள்ளது.இதற்கான கட்டிடப் பணி முழுமையடையும் நிலையில் உள்ளது. 2010 பிப்ரவரி மாதத்தில் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய இக் கட்டிட பணி, நவம்பரில் பணிகள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us