/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அண்ணனை தாக்கிய தம்பிக்கு 10 ஆண்டு சிறைஅண்ணனை தாக்கிய தம்பிக்கு 10 ஆண்டு சிறை
அண்ணனை தாக்கிய தம்பிக்கு 10 ஆண்டு சிறை
அண்ணனை தாக்கிய தம்பிக்கு 10 ஆண்டு சிறை
அண்ணனை தாக்கிய தம்பிக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஆக 06, 2011 02:30 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே நிலத்தகராறில் அண்ணனை கொடுவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த தம்பிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தர்மபுரி அடுத்த மதிகோன்பாளையம் சப்வூட்டுகொட்டாயை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன்கள் முனியப்பன் (39), முருகன் (30). சகோதரர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்தது. இந்நிலையில், 2010 ஜனவரி 19ம் தேதி சகோதரர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் முருகன் அவரது அண்ணன் முனியப்பனை கொடுவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். படுகாயத்துடன் தப்பியோடிய முனியப்பனை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மதிகோன்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். வழக்கு விசாரணை தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த, விரைவு நீதிமன்ற நீதிபதி பத்பநாபன் அண்ணனை கொலை செய்ய முயன்ற முருகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.