Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/7 தோல் தொழிற்சாலை மின் இணைப்பு "கட்': ஆலைத்தொழிலாளர் திடீர் சாலை மறியல்

7 தோல் தொழிற்சாலை மின் இணைப்பு "கட்': ஆலைத்தொழிலாளர் திடீர் சாலை மறியல்

7 தோல் தொழிற்சாலை மின் இணைப்பு "கட்': ஆலைத்தொழிலாளர் திடீர் சாலை மறியல்

7 தோல் தொழிற்சாலை மின் இணைப்பு "கட்': ஆலைத்தொழிலாளர் திடீர் சாலை மறியல்

ADDED : ஜூலை 13, 2011 03:27 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத ஏழு தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் தலைமையில், எஸ்.பி., ஜெயச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன், ஆர்.டி.ஓ., சுகுமார் அடங்கிய குழுவினர், நேற்று தோல் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஈரோடு ஆர்.என்.புதூர் கே.கே.எஸ்.கே.,லெதர் புராசஸிங் நிறுவனம், கே.தங்கமுத்து கவுண்டர் லெதர் நிறுவனம், சூரியம்பாளையம் எஸ்.பி., லெதர்ஸ் ஆகிய மூன்று தொழிற்சாலையையும் ஆய்வு செய்தனர்.ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமையிலான மற்றொரு குழுவினர், நரிப்பாளையம் பகுதியில் கே.ஏ.எஸ். லெதர், சுவாமி லெதர், ஆர்.ஆர்.டேனரி, எஸ்.ஏ.எம். டேனரி உள்பட ஐந்து நிறுவனங்களை ஆய்வு செய்தனர்.

கே.கே.எஸ்.கே., நிறுவனத்தில் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு பூஜ்யம் டி.டி.எஸ்., என்ற அளவில் சுத்தக்கழிவும், தின் பொருள் சுத்தப்படுத்தப்பட்ட விபரமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியக்கு தினமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை பாராட்டிய கலெக்டர், 'அரசின் விதிகளை தொடர்ந்து பின்பற்றி, மாசுகட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.விதிமுறைகளை பின்பற்றாத மற்ற ஏழு தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.திடீர் மறியல்: மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஆலைகளில், ஈரோடு பி.பி.அக்ரஹாரம் தோல் பதனிடும் கூட்டுறவு குடிசை தொழிலியல் சங்கமும் ஒன்று. இதை கண்டித்து, இச்சங்க தொழிலாளர்கள் மற்றும் சிறு தோல் தொழிலாளர், வணிகர்கள் சங்கத்தினர் பவானி ரோட்டில் மறியல் செய்தனர். அவர்களிடம் ஆர்.டி.ஓ., சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. மறியல் போராட்டம் நீடித்தது. பவானி பஸ்கள் சித்தோடு வழியாக மாற்றி விடப்பட்டன.

ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன், டி.எஸ்.பி., குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், சேதுபதி ஆகியோர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், இரவு 9 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us