/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/10 விதி மீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்:சி.எம்.டி.ஏ., அறிவிப்பு10 விதி மீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்:சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
10 விதி மீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்:சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
10 விதி மீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்:சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
10 விதி மீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்:சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
சென்னை:''சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட, 10 வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்தமாதம் 15ம் தேதி நடைபெற்ற கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில், 2007ல் வரைமுறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, இடிக்கப்பட வேண்டியவை என அறிவிக்கப்பட்ட, 48 கட்டடங்களை சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான நோட்டீஸ் அனுப்பவும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவை அமலாக்க, சி.எம்.டி.ஏ.,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த கட்டடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.இந்த இடைபட்ட காலத்தில், அந்த கட்டடங்களின் உரிமையாளர்கள் அளித்த விண்ணப்பங்கள், அதன் மீதான ஆய்வுகள், அது தொடர்பான கோர்ட் உத்தரவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில், 11 கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்கள் கட்டடங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் அடிப்படையில், வரன்முறை செய்யக்கோரி சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்தன. இவை, வரன் முறை செய்ய தகுதியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து எஞ்சியுள்ள வற்றில், 10 வணிக வளாகங்களுக்கும் அவற்றில், வர்த்தகம் உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டு வரும் பல்வேறு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 22 கட்டடங்களுக்கு அடுத்த ஒரு வாரத்துக்குள் நோட்டீஸ்கள் அளிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


