/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அரசு மருத்துவக்கல்லூரி வர்த்தக சங்கம் கோரிக்கைஅரசு மருத்துவக்கல்லூரி வர்த்தக சங்கம் கோரிக்கை
அரசு மருத்துவக்கல்லூரி வர்த்தக சங்கம் கோரிக்கை
அரசு மருத்துவக்கல்லூரி வர்த்தக சங்கம் கோரிக்கை
அரசு மருத்துவக்கல்லூரி வர்த்தக சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 09, 2011 01:15 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு விரைவில் இடம் தேர்வு செய்து, பணியை துவக்க வேண்டும் என, தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சங்க கூட்டம் தலைவர் கிருபாகரன் தலைமையில் நடந்தது. செயலாளர் முருகேசன், பொருளாளர் முகம்மது கனி பங்கேற்றனர். பன்முக சில்லரை வர்த்தகத்தல் 51 சதவீத அந்நிய முதலீட்டை அரசு அனுமதிக்க கூடாது என, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்; பொருள் மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டால், ஏற்கனவே வரிவிலக்கில் உள்ள பொருட்கள் அனைத்தும் அதே நிலையில் நீடிக்க வேண்டும்; மருத்துவக்கல்லூரிக்கு விரைவில் இடம் தேர்வு செய்து, கட்டுமான பணியை விரைவுபடுத்த வேண்டும்; விவசாய பொருட்களை சேமிக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்; திருச்சி ரோடு ரயில்வே பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.


