/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரேஷன் கடை ஊழியர்களுக்கு வாரியம் அமைக்க கோரிக்கைரேஷன் கடை ஊழியர்களுக்கு வாரியம் அமைக்க கோரிக்கை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு வாரியம் அமைக்க கோரிக்கை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு வாரியம் அமைக்க கோரிக்கை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு வாரியம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2011 12:48 AM
செஞ்சி : செஞ்சி வட்ட அண்ணா கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
செஞ்சியில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் கிருஷ்ணசாமி, இணை செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ரவிச்சந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் அமாவாசையான், பழனி, ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் செஞ்சி வட்ட தலைவராக ரவிச்சந்திரன், செயலராக ஏழுமலை, பொருளராக ஆதிகேசவன், துணை தலைவராக ராமதாஸ், துணை செயலராக முனுசாமி தேர்வு செய்யப்பட்டனர். வல்லம், மேல்மலையனூர் ஒன்றியங்களுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தனி வாரியம் அமைத்து, ஊதிய உயர்வு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கும் பொருட்களின் எடை குறைவின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


