/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்புராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஆக 11, 2011 11:36 PM
கோவை : முதலாண்டு மாணவ, மாணவியருக்கான வரவேற்பு விழா, பச்சாபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது.
இறுதியாண்டு மாணவர் அகிலேஷ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜோசப் சேவியர் பேசுகையில், ''மாணவ, மாணவியர் நாற்பது ஆண்டுகள் சந்தோஷமாக வாழ, கல்லூரியில் நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும்; சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருந்தால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியும். பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற மாணவர்கள் தங்கள் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும்,'' என்றார். கல்லூரி அறிவியல் பண்பாட்டுத்துறை தலைவர் கனகசபாபதி உள்ளிட்ட துறைத்தலைவர்கள் மாணவர்களின் நலன் குறித்து பேசினர். வரவேற்பு விழாவை தொடர்ந்து, இம்மாணவர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி கல்லூரி வளாகத்தில், இன்றும், நாளையும் அளிக்கப்படுகிறது. பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை முன்னாள் தலைவர் சிவானந்தம், ஓய்வு பெற்ற விற்பனை வரித்துறை உதவி கமிஷனர் பன்னீர் செல்வம், நீலகிரி டி.எஸ்.பி., சக்ரவர்த்தி, பொதுப்பணித்துறையை சேர்ந்த இளங்கோவன், தொழிற்பயிற்சி ஆலோசகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்கின்றனர்.பயிற்சி முகாமின் நிறைவில், 'விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது எப்படி' என்பது குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது.