கோவையில் தே.மு.தி.க., முக்கிய முடிவு
கோவையில் தே.மு.தி.க., முக்கிய முடிவு
கோவையில் தே.மு.தி.க., முக்கிய முடிவு
ADDED : செப் 22, 2011 12:16 AM

கோவை:அ.தி.மு.க., கூட்டணி இல்லாத அதிருப்தியில் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், சோர்வு இல்லாமல் பணியாற்ற வைக்கும் கூட்டமாகவும் இருக்கும் என தே.மு.தி.க., நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு பின், விஜய்காந்த் பங்கேற்கும் முதல் கூட்டமாகவும், கூட்டணி பற்றி முடிவு செய்யும் முக்கிய கூட்டமாகவும் இது இருக்கும்.கோவையில், தே.மு.தி.க.,வின் ஏழாம் ஆண்டு விழா பொதுக்கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை, கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்துக்கு செல்லும் வழியில் உள்ள இடத்தில், பிரமாண்டமான பந்தலை அமைத்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணியில் இணைந்து செயல்படுவதா, யாருடன் கூட்டணி என்பது பற்றியெல்லாம் ஆலோசனை நடத்த, இரண்டு நாள் முன்னதாகவே, மாநில அளவிலான நிர்வாகிகள் கோவை வர உள்ளனர்.தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், சோர்வு இல்லாமல் பணியாற்ற வைக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விஜய்காந்த் ஆலோசனை நடத்த உள்ளார்.